புதுதில்லி

காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி: ஒமர் அப்துல்லா சூசகம்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட தயாராக உள்ளது என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடாமல் தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் புறக்கணித்து விட்டன. இதன் காரணமாக, நகரங்கள், கிராமங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பாஜக கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.
இதேபோல், சட்டப் பேரவைத் தேர்தலில் உங்களை எளிதில் வெற்றி பெற விடுவோம்? என்று நினைக்கிறீர்களா என்று அந்த பதிவுகளில் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் தமது கட்சியும் போட்டியிட தயாராக இருக்கிறது என்பதை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொது செயலாளர் ராம் மாதவ் அண்மையில் பேசியபோது, எதிர்காலத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டால், அதில் தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் பங்கெடுக்குமா? என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு பக்கத்தில் தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றன; மறுபக்கத்தில் சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றன. சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடத்தப்பட்டால், அதில் அக்கட்சிகள் பங்கெடுக்குமா?' என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, ஒமர் அப்துல்லா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி முதல் ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. 
இந்தத் தேர்தலில் பங்கெடுக்காமல், தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் புறக்கணித்தன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும், அரசியலமைப்பு சட்டத்தின் 35ஏ பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை முன்னிறுத்தியே, உள்ளாட்சித் தேர்தலை அக்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT