தில்லிக்கு ரியல் எஸ்டேட்  ஒழுங்குமுறை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்

தில்லி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முழு நேர தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் எஸ். மதனை

தில்லி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முழு நேர தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் எஸ். மதனை  தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் நியமித்துள்ளார்.
தில்லி வளர்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவர் இந்த அமைப்பின் தற்காலிகத் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பானது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் 2016-இன்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் - வாங்குவோர் விற்போரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஆர்.இ.ஆர்.ஏ. ஷரத்துகளை தில்லி அரசு ஏற்கெனவே அறிவிக்கை செய்திருந்தது.
இது தொடர்பான தகவலை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்.இ.ஆர்.ஏ. பயிலரங்கில் பங்கேற்ற தில்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தெரிவித்தார்.
இதுகுறித்து அனில் பய்ஜால் தெரிவிக்கையில், "இது தொடர்பாக வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சருக்கும், அமைச்சகத்திற்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆர்.இ.ஆர்.ஏ.வுக்கு முழுநேர ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்' என்றார்.
இது தொடர்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) முன்னாள் தலைமை இயக்குநர் விஜய் எஸ். மதன், தில்லி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கியான் பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, ரமேஷ் சந்திரா ஆகியோர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்.இ.ஆர்.ஏ. சட்டமானது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், உறுப்பினர்களை நியமிப்பது, உரிய விதிகள் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுவது ஆகியவற்றுக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com