புதுதில்லி

துப்பாக்கி முனையில் ரூ. 3 லட்சம் கொள்ளை

DIN

ஷாஹிபாபாத் பகுதியில் உள்ள சமையல் எரிவாயு உருளை (காஸ்) கடையில் திங்கள்கிழமை புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ. 3 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காஜியாபாத் காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் உபேந்தர் அகர்வால் கூறியதாவது:
ஷாஹிபாபாத், போபுரா பகுதியில் பாரத் காஸ் ஏஜென்ஸி உள்ளது. இங்கு திங்கள்கிழமை காலை மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு பேர் திடீரென ஊழியர் ரவி என்பரை பிடித்துக் கொண்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். பின்னர் கடையில் இருந்த ரூ. 3 லட்சத்தை அவர்கள் கொள்ளையடித்து கொண்டு ரவியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். எனினும், கொள்ளையர்கள் இருவரும் தங்கள் முகங்களை மறைக்க வில்லை. ஆகையால்,  சிசிடிவி பதிவை வைத்து இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
இதனிடையே, கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையர்களின் புகைப்படங்களை அண்டை மாநிலங்களான ஹரியாணா, தில்லி, ராஜஸ்தானுக்கு காஜியாபாத் போலீஸார் அனுப்பி உள்ளனர்.
இதேபோல், காஜியாபாத், ஷியாம் பார்க் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ. 2 கோடி கொள்ளையடித்து சென்றனர். அண்மையில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்யவில்லை என்றால் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வடக்கு உத்தரப் பிரதேச நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT