இளைஞர் காங்கிரஸ் சார்பில் யுவ கிராந்தி யாத்திரை

மத்திய பாஜக ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் பிரசாரம் செய்யும் "யுவ கிராந்தி யாத்திரை' கன்னியாகுமரியில்

மத்திய பாஜக ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் பிரசாரம் செய்யும் "யுவ கிராந்தி யாத்திரை' கன்னியாகுமரியில் நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படும் என்று இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேஷவ் யாதவ் தெரிவித்தார். இந்த யாத்திரை தில்லியில் ஜனவரி 30-ஆம் தேதி நிறைவடைகிறது.
இது குறித்து கேஷவ் யாதவ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக வெற்று முழக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், நடைமுறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. வளர்ச்சி, விவசாயிகள் நலன், ஊழல் ஆகியவை தொடர்பாக பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சிபிஐ, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களின் சுதந்திரந்தில், மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தோல்வியை மக்களிடம் பிரசாரம் செய்யும் வகையில், நாடு முழுவதும் யுவ கிராந்தி யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை கன்னியாகுமரியில் நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு தில்லியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டில் ஜனவரி 30-ஆம் தேதி நிறைவடையும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com