"கார்கோ'வில் அனுப்பிய வீட்டு பொருள்களை கொண்டு சேர்ப்பதில் மோசடி!

நொய்டாவில் இருந்து புணேவுக்கு பணிமாறுதலாகி சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனியார்

நொய்டாவில் இருந்து புணேவுக்கு பணிமாறுதலாகி சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனியார் "பாக்கர்ஸ் அன் மூவர்ஸ் கார்கோ'வில் ஏற்றி அனுப்பிய பொருள்களைச் சேர்க்காமல் நூதன முறையில் மோசடி நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பொறியாளர் காவல் துறையினரை அனுகிய பின்னர் அவரது பொருள்கள் கிடைத்தன.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில், "தில்லியில் இருந்து புணேவுக்கு எனது வீட்டு உபயோக பொருள்களைக் கொண்டு செல்ல ஜெஸ்ட் டையல் என்ற தேடல் இணையதளத்தில் பதிவிட்டேன். பின்னர் எனக்கு வந்த அழைப்பின் பேரில் சுமார் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள எனது வீட்டு உபயோக பொருள்களை புணேவுக்கு கொண்டு செல்ல ரூ. 61,000 கட்டணம் செலுத்தினேன். 
அக்டோபர் 24ஆம் தேதி லாரியில் பொருள்கள், எனது கல்விச் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை ஏற்றி அனுப்பி வைத்தேன். 28ஆம் தேதி அந்த லாரி புணேவுக்கு வந்தடையும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, நான் எனது குடும்பத்துடன் விமானத்தில் புணேவுக்கு சென்றேன். 20 நாள்களாகியும் புணேவுக்கு அந்த லாரி வந்து சேரவில்லை. இதுதொடர்பாக லாரியின் ஓட்டுநரை தொடர்பு கொண்டுபோது, "தனக்கு லாரி உரிமையாளர் பணம் தரவில்லை. ரூ. 30 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்குக்கு அனுப்பவில்லை என்றால் லாரியில் உள்ள பொருள்களை எல்லாம் அழித்துவிடுவேன்' என்று கூறுகிறார். இதுகுறித்து லாரி உரிமையாளரைத் தொடர்பு கொண்டால் சரியான பதில் அளிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான புகாரை அந்த மென்பொருள் பொறியாளர் நொய்டா, புணே காவல் நிலையங்களில் அளித்திருந்தார். இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுநரும், உரிமையாளரும் ஒரே நபர் என்பது தெரியவந்தது. மென்பொருள் பொறியாளரிடம் பணம் பெறுவதற்காக பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அவர் பேசி மிரட்டியுள்ளார். பின்னர் அந்தப் பொருள்கள் சம்பந்தப்பட்ட மென்பொருள் பொறியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என நொய்டா நகர காவல் துறை கண்காணிப்பாளர் சுதா சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜெஸ்ட் டயல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது, விளம்பரம் செய்வது மட்டும்தான் தங்களது பணியென்றும், விளம்பரத்தின் நம்பகத்தன்மை குறித்து தங்கள் நிறுவனம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டதாகவும் சுதா சிங் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com