தில்லியில் விவசாயிகள் நவ.29-இல் மீண்டும் பேரணி

விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும்,  விவசாய விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியாகக்

விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும்,  விவசாய விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை  நிர்ணயிக்கக் கோரியும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வலியுறுத்தி  நவம்பர் 29-ஆம் தேதி மீண்டும் தில்லியில் பேரணி நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
பொது விநியோக முறையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.  வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க வேண்டும்.  அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 18 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும்.  தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தில்லியில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி விவசாயிகள்  பேரணி நடத்தினர். அவர்களை தில்லி எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில்,  நவம்பர் 29 மீண்டும் தில்லியை நோக்கிய பேரணியும், 30-ஆம் தேதி பொதுக்கூட்டமும் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.  இப்பேரணியில் பங்கேற்க 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கும், பாஜக தவிர மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com