புதன்கிழமை 21 நவம்பர் 2018

குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: குற்றப் பிரிவுக்கு மாற்றம்

DIN | Published: 12th September 2018 01:04 AM

பள்ளியில் மூன்றரை வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
வட மேற்கு தில்லி, முகர்ஜி நகரில் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் மூன்றரை வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமேற்கு காவல் துணை ஆணையர் அஸ்லம் கான், "இந்த விவகாரத்தை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர் அல்லது அருகாமையில் உள்ளவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரித்து வருகிறோம்' என்றார்.  இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத்தவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் கோரி சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் பள்ளியின் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில்,"இந்த வழக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதால் குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது' என்றார்.

More from the section

தில்லியில் டெங்கு தீவிரம்: ஒரே வாரத்தில் 500 பேர் பாதிப்பு
அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கருணையை வலியுறுத்தும் இசை ஓவியம்
தொழிற்சாலையில் தீ விபத்து: 4 பேர் சாவு


காஜியாபதில் என்கவுன்ட்டர்: காவலர் உள்பட மூவருக்கு காயம்