செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

மயூர்விஹார் ஃபேஸ் 1-இல் மூன்று நாள்: சங்கீத ராக மகோத்ஸவம் இசை நிகழ்ச்சி: செப்.21-இல் தொடக்கம்

DIN | Published: 12th September 2018 01:00 AM

நாதபிரம்மம் யுனைடெட் ஞான் அகாதெமி சார்பில் சங்கீத ராக மகோத்ஸவம் தில்லியில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 23 வரை மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.
மயூர் விஹார் ஃபேஸ் 1-இல் அமைந்துள்ள ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் கோயில் வளாகத்தில் இவ்விழா நடைபெறுகிறது. முதல் நாளான செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு டாக்டர் ஸ்ரீதர் வாசுதேவன் மற்றும் ஹம்சினி குழுவினர் வழங்கும் பரத நாட்டியம், செப்.22-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு சாய் சகோதரிகள் வழங்கும் பரத நாட்டியம், மாலை 6.45 மணிக்கு சிக்கில் சி.குருச்சரண் குழுவினர் வழங்கும் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெறும்.
நிறைவுநாளான செப். 23-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு சாத்வி சுந்தரேசன் வழங்கும் பரத நாட்டியம், மாலை 5.30 மணிக்கு ஆர்த்திய ஐயங்கார் வழங்கும் பரதநாட்டியம், மாலை 6.45 மணிக்கு டாக்டர் கே. கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் வழங்கும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாதபிரம்மம் யுனைடெட் ஞான் அகாதெமி அமைப்பினர் செய்து வருகின்றனர்.

More from the section


பிளாஸ்டிக்  தொழிற்சாலையில் தீ விபத்து

எம்.பி.க்கள் வழக்குரைஞர்களாக பணியாற்ற தடைகோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு?
முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகி மீதான வழக்கு விவகாரம்: தில்லி உயர்  நீதிமன்றதில் இன்று விசாரணை
பறவையை காப்பாற்ற நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை!
ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவன  பெண் நிர்வாகி கைது