குருத்வாரா சமையல்கூடங்களில் உயிரி எரிவாயு பயன்படுத்த முடிவு

தில்லியில் உள்ள 10 குருத்வாராக்களின் சமையல்கூடங்களுக்கு உயிரி எரிவாயு (பயோ கேஸ்) இணைப்பு வழங்க தில்லி குருத்வாரா மேலாண்மைக் குழு முடிவு செய்துள்ளது.


தில்லியில் உள்ள 10 குருத்வாராக்களின் சமையல்கூடங்களுக்கு உயிரி எரிவாயு (பயோ கேஸ்) இணைப்பு வழங்க தில்லி குருத்வாரா மேலாண்மைக் குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தில்லி சீக்கியர் குருத்வாரா மேலாண்மை குழுவின் (டிஎஸ்ஜிஎம்சி) தலைவர் ஜி.கே.மன்ஜித் சிங் கூறியதாவது:  இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதால் எரிபொருள் கட்டணம் குறைவதுடன் சுற்றுச்சூழலும் மேம்படும்.
முதற்கட்டமாக மக்கும் தன்மையுள்ள கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்து ரஹேப் கஞ்ச் மற்றும் பங்க்ளா சாஹேப் கோயில்களின் சமையல்கூடங்களில் பயன்படுத்தப்படும்.
இங்குள்ள சமுதாய சமையல்கூடத்தில் சமைக்கப்படும் உணவு தினமும் குருத்வாராவுக்கு வருகை தரும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்விரண்டு சமையல்கூடங்களிலும் கிடைக்கும் 4 டன் சமையல் கழிவுகளை பயன்படுத்தி உயிரி எரிவாயு உற்பத்தி செய்ய முடியும்.
இந்த உயிரி எரிவாயு உற்பத்தி தொழிற்கூடங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் முன்னணி நிறுவனங்களின் உதவியுடன் நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com