புதுதில்லி

திகார் சிறை முன் போராடிய வழக்கில் சிசோடியா விடுவிப்பு

DIN


கடந்த 2014-ஆம் ஆண்டில் திகார் சிறை முன்பு போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், சஞ்சீவ் ஜா உள்ளிட்டோர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடுத்த அவதூறு வழக்கில் பிணைத் தொகையை செலுத்த மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த 2014, மே மாதம் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், திகார் சிறை முன்பு மணீஷ் சிசோடியா, அமானத்துல்லா கான், சஞ்சீவ் ஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், சட்டவிரோதமாக கூடியதாகவும் சிசோடியா உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் 4 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது. அதற்கான வலுவான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டும், சிசோடியா உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வலுவற்றதாக உள்ளதாக கூறியும் அவர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி சமர் விஷால் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT