புதுதில்லி

தொழிலதிபர் நீரஜ் கொச்சாருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன்

DIN

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் அளிக்க முயன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீரஜ் கொச்சாருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக நீரஜ் கொச்சார் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அண்மையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. காவல்துறை விசாரணையால் குணமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த ஜாமீன் மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.கே. மல்ஹோத்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நீரஜ் கொச்சாருக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை' எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ரூ.1 லட்சம் சொந்த ஜாமீனில் நீரஜ் கொச்சாரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT