80 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் மூலம் புல்வாமாவில் தாக்குதல்: விசாரணை அதிகாரிகள் தகவல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு 80 கிலோ எடையுள்ள

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு 80 கிலோ எடையுள்ள உயர் ரக ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் நடப்பட்ட  மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றான புல்வாமா தாக்குதலில், சாதாரண வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
காரணம், வெடிபொருள் நிரப்பிய கார் மூலம் தாக்குதலுக்குள்ளான பேருந்து, உருவமே தெரியாமல் கரித் துண்டுகளாக சிதறியுள்ளது. எனவே, இந்தத் தாக்குதலில் 80 கிலோ எடை கொண்ட ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதுவும், அந்த ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் உயர் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் சிஆர்பிஎஃப்  வீரர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளான வாகன அணிவகுப்பில் 78 வாகனங்கள் இருந்ததாகவும், அதில் குண்டுகள் தகர்க்க முடியாத 16 கவச வாகனங்கள் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த அணிவகுப்பில் 5-ஆவதாக வந்த பேருந்தை தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியவில்லை. இந்த நிலையில், பாதுகாப்புப் படையினரை அழைத்துச் செல்வதற்கு கூடுதல் பாதுகாப்பான வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com