புதுதில்லி

தில்லி அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி

DIN

தில்லி அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது: 
தில்லி அரசுப் பள்ளிகளில் 8- 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வழங்க தில்லி கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி 8-10 வகுப்பு மாணவர்களுக்கு கணினி தொடர்பான ஆரம்ப அறிவை வழங்கும் வகையில் பயிற்சிகள் இருக்கும். 10-12 வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். இந்தக் கணினிப் பயிற்சிகளுக்கு முதல் கட்டமாக 184 அரசுப் பள்ளிகள் தேர்வாகியுள்ளன. இந்தப் பயிற்சிகள் டிசிஎஸ் கணினி நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT