வீட்டில் அனைவரும் புது தில்லி, ஜன. 14: வீடுகளில் தமிழிலேயே உரையாடுவோம் என தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பாஜக முன்னாள் எம்பியும், தமிழுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.பொங்கல் திருநாளை தில்லி, கனாட் பிளேஸில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் தரூண் விஜய் திங்கள்கிழமை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதா

வீடுகளில் தமிழிலேயே உரையாடுவோம் என தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று

வீடுகளில் தமிழிலேயே உரையாடுவோம் என தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பாஜக முன்னாள் எம்பியும், தமிழுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் திருநாளை தில்லி, கனாட் பிளேஸில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் தரூண் விஜய் திங்கள்கிழமை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
பொங்கல் கொண்டாட்டம் தமிழ் மக்களுக்கு புதுவிதமான மகிழ்ச்சியைக் கொண்டு வரும். தமிழின் வளர்ச்சிக்கு இந்த ஆண்டு மிகுந்த உறுதுணையாக இருக்கும். உலகத்தை ஆளும் வகையில் தமிழின் மகிமை பரவட்டும். தமிழை பலப்படுத்துவது, இந்தியாவையும் அதன் ஒற்றுமையையும் பலப்படுத்துவதாகும்.
இந்திய மொழிகளில் தமிழுக்கென தனித்தன்மை உள்ளது. இதை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். பாரதியாரின் மரபும் இதுதான்.
தமிழ் சகோதர, சகோதரிகள் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள், பெற்றோர் உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் தமிழிலேயே உரையாடுவோம் என்று இந்த பொங்கல் நன்னாள் முதல் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். நமது வீடுகளில் நாம் தமிழுக்கு மரியாதை தரவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி நமது தமிழ் மொழியின் பெருமைக்கு மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com