செல்லிடப்பேசி வழிப்பறி: சிறுவர்கள் இருவர் கைது

புதுதில்லி, கனாட்பிளேஸ் உள்ளிட்ட பகுதியில் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுதில்லி, கனாட்பிளேஸ் உள்ளிட்ட பகுதியில் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து இது குறித்து புதுதில்லி காவல் சரக கூடுதல் துணை ஆணயார் குமார் ஞானேஷ் வியாழக்கிழமை கூறியதாவது: 
தில்லியில் தினமும் மிகவும் பரப்பாக உள்ள கனாட்பிளேஸ், மந்திர்மார்க், பாஹர்கஞ்ச், நார்த் அவன்யு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து செல்லிடப்பேசி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது தொடர்பாக ஏராளமான புகார்கள் கிடைக்கப் பெற்றன. இதைத் தொடர்ந்து, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
 இந்நிலையில், கனாட்பிளேசில் குற்றத்தில் ஈடுபடும் நோக்கில் ஒரு ஸ்கூட்டிரில் காத்திருந்த இரண்டு சிறுவர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து திருட்டு செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன. மேலும், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்
டது.
அவர்கள் பல்வேறு கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையின் போது தெரிய வந்தது. பகர்கஞ்சில் திருடிய ஸ்கூட்டரை திருட்டுத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். 
அவர்கள் பெரும்பாலும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில்தான் வழிப்பறி, திருட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிறப்புவதற்காக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோலையும் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்தது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com