புதுதில்லி

குடியுரிமை திருத்த மசோதாவால்பாகிஸ்தானியருக்கே அதிக பயன்: மத்திய உள்துறை அமைச்சகம்

DIN

குடியுரிமை திருத்த மசோதாவால், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள நபர்களே அதிகம் பயனடைவர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது:
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், நீண்ட கால விசா திட்டத்தின்கீழ் வங்கதேசத்தினர் 187 பேருக்கு மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் விசா அளித்துள்ளது. அதேநேரத்தில் இக்காலக்கட்டத்தில் பாகிஸ்தானியர் 34,817 பேருக்கு நீண்ட கால விசா அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடியுரிமை திருத்த மசோதா சட்டமானால், இந்த எண்ணிக்கையை காட்டிலும் அதிக வங்கதேசத்தினரால் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது. இதனால் வங்கதேசத்தினர் குறைந்த எண்ணிக்கையிலேயே பயனடைவர். அதேநேரத்தில் பாகிஸ்தானியர்கள் அதிக பயனடைவர். நீண்டகால விசா அளிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களில் பெரும்பாலானோர், ராஜஸ்தானில் வசிக்கின்றனர். இதற்கடுத்து குஜராத்தில் 1,560 பேர் வசிக்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் 1,444 பேரும், மகாராஷ்டிரத்தில் 599 பேரும், தில்லியில் 581 பேரும், சத்தீஸ்கரில் 342 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 101 பேரும் வசிக்கிறார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறி நீண்டகாலமாக வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மை சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த 8ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியபோது, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் குடியுரிமை திருத்த மசோதா பொருந்தும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்து, நாட்டின் பிற பகுதிகளில் குடியேறுவோருக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT