குமரியில் பயன்பாட்டுக்கு வரும் மன்னர் கால தபால் பெட்டி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பயன்பாட்டில் இருந்த தபால் பெட்டி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பொதுமக்கள் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பயன்பாட்டில் இருந்த தபால் பெட்டி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பொதுமக்கள் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 உலகம் முழுவதும் இணையதளத்தின் அபார வளர்ச்சியால் பொதுமக்களிடையே கடிதம் எழுதும் பழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் கடிதம் எழுதும் பழக்கத்தை பொதுமக்களிடையே மீண்டும் ஏற்படுத்த தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கடிதம் அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான தபால் பெட்டி குமரி மாவட்டத்தின் குழித்துறை, இரணியல் பகுதியில் இருந்தது.
 குழித்துறையில் இந்த தபால் பெட்டியை இன்றளவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இரணியலில் இருந்த தபால் பெட்டி கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையச் சந்திப்பில் பீடம் கட்டிவைக்கப்பட்டுள்ளது. இந்த தபால் பெட்டியை இன்னும் 10 நாளில் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியில் நாகர்கோவில் சார் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 தபால் துறையின் இந்த நடவடிக்கை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com