பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்கு இன்று திறப்பு

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மக்கள் பார்வைக்காக சனிக்கிழமை மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகர்கோவில் பார்வதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மக்கள் பார்வைக்காக சனிக்கிழமை மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் ரூ.325 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் இப்பாலங்களில் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.
திறந்த பின்னர் மக்கள் பாலத்தை பார்வையிட முடியாது என்பதால், திறப்பு விழாவிற்கு முன்னதாக பாலத்தை மக்கள் பார்வையிட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அண்மையில் மார்த்தாண்டம் மேம்பாலம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. மார்த்தாண்டம் பாலத்தை பார்வையிட்ட மக்கள் பாலத்தில் இருந்து சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சில தினங்களில் மார்த்தாண்டம் பாலத்தில் போக்குவரத்துத் தொடங்க உள்ளது. இந்நிலையில் பார்வதிபுரம் மேம்பாலத்தை மக்கள் பார்வையிடுவதற்காக சனிக்கிழமை (டிச. 15) திறந்து விடப்படுகிறது. மாலை 4 முதல் 7 மணி வரை பொதுமக்கள் பாலத்தில் நடந்து சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்பாலம் மின்னொளியில் ஜொலிப்பதால் பயணிகள் பிரமிப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com