கன்னியாகுமரி

நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: ரூ. 6.25 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

DIN


குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொதுமக்களிடமிருந்து 299 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கடந்த 13.6.2018 அன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கல்குளம் வட்டம், வியன்னூர் கிராமத்தைச் சேர்ந்த மிக்கேல்ராஜின் மனைவி வின்சி ராஜபாய், கொல்லங்கோடு கிராமத்தைச்சேர்ந்த ஜெயகுமார் மனைவி கிறிஸ்டல் ராஜம் ஆகியோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையையும், இதய அறுவை சிகிச்சைக்காக விஜின் என்பவருக்கு தமிழ்நாடு மாநில நோயாளர் நல நிதியிலிருந்து ரூ. 25 ,ஆயிரத்துக்கான காசோலையையும் என மொத்தம் ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT