கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு

DIN

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை சார்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. 
கருத்தரங்கை, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.பெருமாள்சாமி,  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  கர்நாடக தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பல்கலைக்கழக கல்வி விவகாரங்கள் துறை இயக்குநர் ஷஜின் நற்குணம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சந்திரசேகர் கிளாவுட் காம்புடிங் குறித்து விளக்கி பேசினார்.
தொடக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழக கணினி அறிவியல்துறை பேராசிரியை பிபல் பெநிபா, ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை மற்றும்  கணினி நிறுவனங்களிலிருந்து  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்டோருக்கு பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத்கான் சான்றிதழ்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT