திக்குறிச்சி மஹா புஷ்கரத்தில் சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் நடைபெற்று வரும் மஹா புஷ்கர விழாவின் 5ஆவது நாளான செவ்வாய்க்கிழமை

திக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் நடைபெற்று வரும் மஹா புஷ்கர விழாவின் 5ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பிரத்யங்கரா சூலினி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகே உள்ள தாமிரவருணி நதியில் நடைபெறும் இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நதியில் நீராடி செல்கின்றனர்.
விழாவின் 5ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலையில் பிரத்யங்கர சூலினி ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
மதியம் மஹா புஷ்கர விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் சிறப்பு பூஜைகள், தாமிரவருணி நதிக்கு ஆரத்தி உள்ளிட்டவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com