விமான நிலையம்: குமரி, நெல்லை மாவட்டங்களில் மத்திய அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய விமானத் துறை அதிகாரிகள் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் வருகின்றனர். பின்னர், அங்கிருந்து வாகனங்களில் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இவர்கள் கன்னியாகுமரியை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரே நாளில் திரும்பிச் சென்றுவிடுகின்றனர். இப்பயணிகள் கன்னியாகுமரியில் மூன்று நாள்கள் வரை தங்கியிருந்து இம்மாவட்டத்தின் இதர சுற்றுலாப் பகுதிகளையும் பார்த்துச் சென்றால் சுற்றுலா வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மேலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் திருவனந்தபுரம் விமான நிலையத்த்துக்குச் செல்லும் நிலை உள்ளது. குமரி மாவட்டத்தின் தலைமையிடமான நாகர்கோவிலில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவிலுள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்ல பல மணி நேரமாகிறது. எனவே, சுற்றுலா வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் தேவைக்காகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக குமரி மாவட்டம், சாமிதோப்பு பகுதியில் ஏற்கெனவே சர்வே மற்றும் ஆய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு, புத்தளம், மணக்குடிப் பாலம் ஆகிய இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் இருக்கன்துறை பகுதியிலும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய விமானத் துறை துணைப் பொதுமேலாளர் நீரஜ்குப்தா தலைமையிலான விமானத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com