கன்னியாகுமரி

கல்குறிச்சி பள்ளியில்  அறிவியல் கண்காட்சி

DIN

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராதிகா தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் கனகராஜ் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். தாளாளர் அருள்தந்தை  ஜாண்சாமுவேல், மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு பாராட்டினார். புனித ஜோசப் நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.  சிறந்த படைப்புகளை உருவாக்கிய  வி.ஆர். வர்ஷா, ஆனி பிளசன்டினா, ஜாண்சலின், ஆன்றோ பிளசென்ட் ஆகிய மாணவிகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. 
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரெக்சலின், செலஸ்டின், லுசினா, பிலோமினா, விஜயா, ரெஜின்மேரி, ஷெர்லின், ஷாலியோவா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT