18 நவம்பர் 2018

நாகர்கோவிலில் திமுகவினர்-போலீஸார் வாக்குவாதம்: சாலையில் படுத்து எம்எல்ஏ மறியல்

DIN | Published: 11th September 2018 08:11 AM

நாகர்கோவிலில் கடைகளை அடைக்க வலியுறுத்திய திமுகவினருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜனை போலீஸார் தரக்குறைவாக பேசியதாகக் கூறி, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில், திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் ராஜன் தலைமையில் திரண்ட திமுகவினர், அங்கு திறக்கப்பட்டிருந்த கடையை அடைக்க வலியுறுத்தினர். காவல் துறை அதிகாரி ஒருவர் அவர்களை தடுத்துள்ளார்.
இதனால், திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், காவல் துறை அதிகாரி சுரேஷ்ராஜன் எம்எல்ஏவை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினரும், அவரது ஆதரவாளர்களும், அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள செம்மாங்குடி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மறியலில் ஈடுபட்ட சுரேஷ்ராஜனை சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அவரது சமரசத்தை ஏற்காமல், காவல் துறை அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து  உறுதியளிக்க வேண்டும் என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜனிடம் பேச்சுவர்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

More from the section

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால 
அடிப்படையில் நிவாரணம் வழங்கவேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்


நவ. 22இல் குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்


விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 6.70 லட்சம் நிதி

கருங்கல் அரசு மருத்துவமனையில் கிள்ளியூர் எம்எல்ஏ ஆய்வு
அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவசியம்: பள்ளி விழாவில் கனிமொழி பேச்சு