சனிக்கிழமை 17 நவம்பர் 2018

நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

DIN | Published: 11th September 2018 08:13 AM

நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம், பெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் மார்த்தாண்டன் (40), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு லதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 
இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் சென்ற அவர், பார்வதிபுரம் பகுதி ரயில் தண்டவாளம் அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு, திடீரென நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலின்பேரில் சென்ற நாகர்கோவில் ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


 

More from the section

கஜா புயல்: குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை
திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து
வடசேரியில் குடியிருப்புப் பகுதியில் மழை நீரை அகற்றும் பணி
டெங்கு கொசு புழு ஒழிப்புப் பணி ஆய்வு: தூய்மையாக பராமரித்தவர்களுக்கு பாராட்டு
பணி ஓய்வு பெறும் காவல் அலுவலர்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்