சனிக்கிழமை 17 நவம்பர் 2018

புதுக்கடை அருகே வங்கி ஊழியரிடம் ரூ. 70 ஆயிரம் பறிப்பு

DIN | Published: 11th September 2018 08:13 AM

குமரி மாவட்டம்,  புதுக்கடை அருகே வங்கி ஊழியரிடம் ரூ. 70 ஆயிரத்தை  பறித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம், புதுக்கடையை அடுத்த பைங்குளத்தை சேர்ந்தவர் தினேஷ் (28). இவர், பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சனிக்கிழமை  மாலை வழக்கம் போல் வங்கிப் பணிகளை முடித்து விட்டு,  தனது நண்பரிடம் ரூ. 70 ஆயிரம் கடனாகப் பெற்றுக் கொண்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். 
பைங்குளம் அருகே வரும்போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கையில் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து புதுக்கடை போலீஸில் தினேஷ் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பணத்தை பறித்து கொண்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
 

More from the section

வடசேரியில் குடியிருப்புப் பகுதியில் மழை நீரை அகற்றும் பணி
டெங்கு கொசு புழு ஒழிப்புப் பணி ஆய்வு: தூய்மையாக பராமரித்தவர்களுக்கு பாராட்டு
புதுக்கடை-பரசேரி சாலையை  உடனே சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்: கிள்ளியூர் எம்.எல்.ஏ
காவல் நிலையத்தில் இருந்து  தப்பி ஓடியவர் கைது
பணி ஓய்வு பெறும் காவல் அலுவலர்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்