புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

அழகியமண்டபத்தில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 09:19 AM

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீனிவாஸை, போலீஸார் தாக்கியதாக கண்டனம் தெரிவித்து,  இளைஞர் காங்கிரஸார் அழகியமண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  மாவட்ட காங்கிரஸ் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்தார். தக்கலை வட்டாரத் தலைவர் ஜாண்கிறிஸ்டோபர்,  கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜோண், குளச்சல் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் காரல்மார்க்ஸ்,  பத்மநாபபுரம் நகர பொதுச்செயலர் ராபர்ட் , சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குளச்சல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி  சத்தியவேல் வரவேற்றுப் பேசினார். மாநிலப் பேச்சாளர் அனில் குமார்  விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் சார்லஸ், மதியழகன், வேணு, ராஜேஷ்,  வின்சென்ட், லெனின், கிறிஸ்டல்,  ஜோண்ஸ் இம்மானுவேல்,  ஸ்டான்லி,  பெலிக்ஸ்,  பிரிட்டோ, ஆல்பர்ட்,  மைக்கேல்,  ராஜன், ஜோஸ், வினோஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

More from the section

ஆற்றூர், சித்திரங்கோடு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் மக்கள் மனு
அன்னை ஆதா மியூசிக் அகாதெமி, ஆதா டெக்ஸ் தொடக்க விழா
அருமனை அருகே பெண்ணிடம்  தங்கச் சங்கிலி பறிப்பு
பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை
மின் ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு