வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

குமரி, அனந்தபுரி விரைவு ரயில்கள் மூன்றரை மணி நேரம் தாமதம்

DIN | Published: 12th September 2018 09:21 AM

சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்ட கன்னியாகுமரி, அனந்தபுரி விரைவு ரயில்கள் நாகர்கோவிலுக்கு 3  மணி நேரம் தாமதமாக செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன.
நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியிருந்து சென்னை உள்ளிட்ட  வட மாவட்டங்களுக்குக்குச் சென்றுகொண்டிருந்த ரயில்கள், கோவில்பட்டி பகுதியில் திங்கள்கிழமை இரவு தண்டவாளத்தில்  மின்வயர்கள் அறுந்து விழுந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் இந்த ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 
மேலும், சென்னை, கோவை, பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்துகொண்டிருந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.நாகர்கோவிலுக்கு வழக்கமாக காலை 5.30 மணிக்கு வரும் சென்னை- கன்னியாகுமரி விரைவு ரயில், மேற்கூறிய பிரச்னையால் மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.15  மணிக்கு  வந்து,  9.40  மணிக்கு கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றது. 
இதேபோல், கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு காலை 4.55  மணிக்கு வரவேண்டிய விரைவு ரயில், காலை 8.10 மணிக்கு  வந்து சேர்ந்தது.  சென்னை- திருவனந்தபுரம்  அனந்தபுரி விரைவு ரயில் காலை 9.30  மணிக்கு பதிலாக பிற்பகல் 12.45  மணிக்கும், காலை 8.20  மணிக்கு வரவேண்டிய பெங்களூரு விரைவு ரயில் முற்பகல் 11 மணிக்கும் வந்தடைந்தன. ரயில்களின் தாமதத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
 

More from the section

உருது பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக என்.ஐ. பல்கலைக்கழக இணைவேந்தர் நியமனம்
விலைமதிப்பு மிக்க பொருள்களைப் பாதுகாக்க கோயில்களில் தனி அறை அமைக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்
குமரி மாவட்டத்தில் மூலிகை பண்ணை அமைக்க பரிசீலனை: பொன்.ராதாகிருஷ்ணன்
பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் எம்.எல்.ஏ. மக்கள் குறைகேட்பு
23,24 இல் குமரி மாதா திருத்தலத்தில் தேதித் திருவிழா