வியாழக்கிழமை 18 அக்டோபர் 2018

குமரி மாவட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் சுற்றுலாப் பயணம்

DIN | Published: 12th September 2018 09:21 AM

மாற்றுத் திறனாளி சிறப்பு குழந்தைகளுக்கான ஒரு நாள் இன்பச் சுற்றுலா பேருந்தை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி  கொடியசைத்து செவ்வாய்க் கிழமை தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையம்  மாற்றுத் திறன் சிறப்புக்
குழந்தைகளுக்கான ஒரு நாள் இன்பச்சுற்றுலா அழைத்துச்செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுலாவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர்  கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில், குமரி மாவட்டத்தில் செயல்படும் 3  ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சிபெறும் சிறப்பு குழந்தைகள் 60 பேர் காளிகேசம் மற்றும் கன்னியாகுமரிக்குச் சென்று வந்தனர். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் ஆரம்பநிலை பயிற்சி மையங்களான சாந்தி நிலையம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, ரிஜாய்ஸ் ஆட்டிசம் சிறப்பு பள்ளி மற்றும் ஓரல் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

More from the section

விமான நிலையம்: குமரி, நெல்லை மாவட்டங்களில் மத்திய அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
கமல்ஹாசனின் நாடகம் தேர்தலுக்கு ஒத்துவராது
என்.ஐ. பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு
சபரிமலை பிரச்னை: குமரியில் ஐயப்ப பக்தர் சத்தியாகிரகம்
திக்குறிச்சி மஹா புஷ்கரத்தில் சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு