செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

நாகர்கோவிலில் ராகவேந்திரா ஆராதனை விழா

DIN | Published: 12th September 2018 09:18 AM

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பெரியதெருவில் ஸ்ரீ ராகவேந்திராவின் 347 ஆவது ஆராதனை விழா  நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, அறக்கட்டளை நிறுவனர் அய்யப்பன் தலைமை வகித்தார். செயலர் சிதம்பரநடராஜன் நூல் அறிமுக உரையாற்றினார்.
இதில், கவிஞர் தமிழ்க்குழவி எழுதிய ஸ்ரீ ராகவேந்திரா பிள்ளைத் தமிழ் நூலை, பாரத ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் அருணகிரி வெளியிட்டார். அதன் முதல்பிரதியை,  விஜெயதா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலர் டாக்டர் எஸ்.பத்மநாபன்,  விஸ்வ ஹிந்து பரிஷத் ரத்தினசாமி, பாங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர்கிரண்குமார்  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 நிகழ்ச்சியில், தெ.தி.இந்துக் கல்லூரிப் பேராசிரியர் ஜெகதீசன், வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவர் சண்முக சுந்தர்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

More from the section

தக்கலையில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி
திருவிதாங்கோட்டில் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி
மாற்றுத் திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க கோரிக்கை


குறும்பனை -நீரோடி வரை கடல் அலை தடுப்புச் சுவர்: தமிழக முதல்வருக்கு கிள்ளியூர் எம்.எல்.ஏ கோரிக்கை

குமரியில் பேப்பர் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியர் ஆய்வு