வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

நாகர்கோவிலில்  அரசு மருத்துவர்கள் மனிதச் சங்கிலி

DIN | Published: 12th September 2018 09:19 AM

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார். சங்கச் செயலர் சுரேஷ் பாலன், மாநில பிரதிநிதிகள் முரளிதரன், முத்துகுமார், பேராசிரியர் குழுத் தலைவர் பிரவின் மற்றும் திரளான மருத்துவர்கள் மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

More from the section

4 தலைமுறைக்கானது மார்த்தாண்டம் மேம்பாலம்: பொன். ராதாகிருஷ்ணன்
அருமனை அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு: அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது
மார்த்தாண்டத்தில் ரோபோடிக் பயிற்சி முகாம்
அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: ரூ.66.30 லட்சம் கடனுதவி


குமரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் நாளை அம்மா திட்ட  முகாம்