கன்னியாகுமரி

ஊழலுக்கு எதிராக திமுக போராடுவது வேடிக்கை

DIN

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம்.
இதுகுறித்து நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசின் முதல்வர் மீதோ, மற்றவர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில், ஊழல் செய்ததாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஊழலின் பிறப்பிடமாக விளங்குவது திமுக. ஒருமுறை ஊழலுக்காகவும், மற்றொரு முறை தீவிரவாத ஆதரவுக்காகவும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டது திமுக என்பதை மறந்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
நெடுஞ்சாலை துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் ஒருநபர் ஒப்பந்தமாக திமுக ஆட்சியில் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோலத்தான், இப்போதும் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT