நாகர்கோவிலில் 500 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

நாகர்கோவிலில் 500 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் செவ்வாய்க்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.

நாகர்கோவிலில் 500 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் செவ்வாய்க்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் கோயில்கள், பொது இடங்கள், நகரம், கிராமப்புறங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் இந்து முன்னணி, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஏற்கெனவே கடல் மற்றும் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. 
இறுதிக்கட்டமாக இந்து மகாசபா சார்பில் விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை கரைக்கப்பட்டன. இதற்காக காலையில் இருந்தே குமரி மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் நாகர்கோவில் நாகராஜா திடலை அடைந்தன. 
அங்கிருந்து  மாலையில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கிராமிய இசையுடன் கூடிய பக்தி பாடலுக்கு விநாயகர் சிலை ஊர்வலத்தில் சென்ற பக்தர்கள் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஊர்வலம், ஒழுகினசேரி, வடசேரி,  மணிமேடை சந்திப்பு,  கோட்டாறு, கடற்கரைச் சாலை, பறக்கை விலக்கு, பிள்ளையார்புரம் வழியாக சொத்தவிளை கடற்கரையை அடைந்தது. அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் மத்தியில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com