மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

குமரி மாவட்டம், மண்டைக்காடு  பகவதி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்

குமரி மாவட்டம், மண்டைக்காடு  பகவதி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா? என நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் நீதிபதிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, நாகர்கோவில் நாகராஜா கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் ஆகியவற்றில் மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோயில்களில் மேற்கொள்ளவுள்ள அடிப்படை வசதிகளை சீரமைத்து பக்தர்களுக்கு உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆகியவற்றில் மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா தலைமையில் தலைமை குற்றவியல் நடுவர் பாண்டியராஜ் அடங்கிய குழுவினர் திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா இயங்குகிறதா? பாதுகாப்பு வசதிகள் போதிய அளவில் உள்ளனவா? கோயில் மூலஸ்தானம், உள்பிரகாரம், வெளிப்பிரகாரப் பகுதிகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? எனவும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்குச் சென்ற நீதிபதிகள் குழுவினர், கோயிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் கடைகளை ஒழுங்குபடுத்துமாறும், பெண் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறைப்படுத்தவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com