23,24 இல் குமரி மாதா திருத்தலத்தில் தேதித் திருவிழா

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 2 நாள் தேதித் திருவிழா இம்மாதம் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 2 நாள் தேதித் திருவிழா இம்மாதம் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல திருவிழா முன்பு அக்டோபர் மாதம் 10 நாள்கள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் திருவிழா நேரத்தில் நெத்திலி, சாவாளை மீன்களின் சீசனாக இருந்ததால் மீன்களை தேர் பவனி நடைபெறும் வீதியில் உலர வைத்து இருந்தனர். இதனால் மாதாவின் தேர் பவனி வருவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் அக்டோபர் மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு மாற்றியமைக்கப்பட்டது.  எனினும் பாரம்பரியமாக  நடந்து வந்த  அக்டோபர் மாத திருவிழாவை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் 2 நாள்கள் தேதித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு தேதித் திருவிழாவை முன்னிட்டு 23-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை,  மாலை வழிபாடு,  நற்கருணை ஆசீர் நடைபெறும். 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி முதல் திருவிருந்து நடைபெறும்.  மாலை 5.30 மணிக்கு தேரோடும் வீதிகளில் நற்கருணை பவனி நடைபெறும். 
 இதைத் தொடர்ந்து புனித அந்தோனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நற்கருணை ஆராதனை நிகழ்வுக்கு பங்குத்தந்தை ஜோசப்ரெமால்ட் தலைமை வகிக்கிறார்.  
தேதித் திருவிழா ஏற்பாடுகளை பங்குமக்கள், பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் ஏ.மைக்கேல், செயலர் சந்தியா வில்லவராயர்,  பொருளாளர் பெனி, துணைச் செயலர் தினகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
திருவிழா நாள்களில் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com