நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவிலில் சனிக்கிழமை (செப். 22) எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் சனிக்கிழமை (செப். 22) எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகர்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் செப். 22ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையை முன்னிட்டும், பொதுமக்கள் நலன் கருதியும் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்துகள், திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக தக்கலை, இரணியல், மார்த்தாண்டம், திருவனந்தபுரம் செல்லும்  வாகனங்கள் அனைத்தும் ஆரல்வாய்மொழியிலிருந்து மாற்றுப்பாதையாக செண்பகராமன்புதூர், துவரங்காடு சந்திப்பு, திட்டுவிளை வழியாக செல்ல வேண்டும்.
திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் தோட்டியோடு, களியங்காடு வழியாக இறச்சகுளம், துவரங்காடு சந்திப்பு, செண்பகராமன்புதூர் வழியாக ஆரல்வாய்மொழி சென்று திருநெல்வேலி செல்ல வேண்டும். 
அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வழியாக வரும் வாகனங்கள் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு வழியாக மணக்குடி, புத்தளம் சென்று கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, ஈத்தாமொழி  வழியாக செல்ல வேண்டும்.
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் தோட்டியோடு வழியாக இரணியல் சாலை சென்று மடவிளாகம், ராஜாக்கமங்கலம், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும். இந்தப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com