களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் சிறப்பு விழிப்புணர்வுக்  கருத்தரங்கு நடைபெற்றது.

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் சிறப்பு விழிப்புணர்வுக்  கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் எம். எக்கர்மென்ஸ் மைக்கேல் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ. மீனாட்சி சுந்தரராஜன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் ராபின்சன் ஆகியோர் வாழ்த்தினார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கல்வியாளர்கள் ரோபேட்டோ மார்கோரி பிளாரன்ஸ், மார்சவோ மன்சினி பிளாரன்ஸ் ஆகியோர் கருத்தரங்கை வழிநடத்தினர். தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். வணிகவியல் துறைத் தலைவர் ஆர். ஷோபா ராணி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை வணிகவியல் துறை மற்றும் வணிக மேலாண்மைத்  துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com