குமரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் துணை ராணுவத்தினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் துணை ராணுவத்தினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 1694 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், சட்டப்பேரவை தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டன. 
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தேர்தல் பொதுப்பார்வையாளர் காஜல்,  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.  இந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார், துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்: வாக்கு எண்ணும் மைய வளாகம் முழுவதும் 50 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  24 மணி நேரமும் போலீஸார் 3 பிரிவுகளாக கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்களின் முகவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 25 துணை ராணுவப்படையினர், 3 டி.எஸ்.பி. க்கள், 6 காவல் ஆய்வாளர்கள், 15 காவல் உதவிஆய்வாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com