மலையாள பின்னணிப் பாடகர் கமுகற புருஷோத்தமன் பிறந்தநாள் விழா

மறைந்த மலையாள பின்னணிப் பாடகரும்  கர்நாடக இசைக் கலைஞருமான  கமுகற புருஷோத்தமனின் 90 ஆவது பிறந்த நாள் விழா குலசேகரத்தில் நடைபெற்றது.


மறைந்த மலையாள பின்னணிப் பாடகரும்  கர்நாடக இசைக் கலைஞருமான  கமுகற புருஷோத்தமனின் 90 ஆவது பிறந்த நாள் விழா குலசேகரத்தில் நடைபெற்றது.
மலையாளத் திரையுலகில் 1950 மற்றும் 1960 களில் புகழ்பெற்ற பின்னணி பாடகராக வலம் வந்தவர் திருவட்டாறு அருகே
யுள்ள கேசவபுரத்தைச் சேர்ந்த கமுகற புருஷோத்தமன். ஹரிசந்திரா திரைப்படத்தில் பாடிய ஆத்ம வித்யாலயமே என்ற பாடல் இவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது. 
திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடிய இவர், அன்றைய காலகட்டத்தில் வானொலி நிலையங்களிலும் பாடல்கள் பாடியுள்
ளார். இவரது 90 ஆவது பிறந்த நாளை ஓராண்டு கொண்டாட கமுகற பவுன்டேஷன், குலசேகரம் எப்ஏசி, திருவட்டாறு நண்பர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா குலசேகரத்தில் நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு, எப்ஏசி அரங்கத் தலைவர் ஜி. கிருஷ்ணன் நம்பூதிரி தலைமை வகித்தார். கவிஞர் மதுசூதனன், பேராசிரியர் அலியார், நடிகர் எம்.ஆர். கோபகுமார், கமுகற பவுன்டேசன் தலைவர் ஓ.என்.வி. ராஜீவ், மாணவர் திரைப்பட்ட இயக்குநர்  ஷெமின் பி. நாயர், நாடகக் கலைஞர் சி.கே. பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கமுகற இசைப்பள்ளி மாணவர்கள் பாடல் பாடினர். புருஷோத்தமனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கமுகற பவுன்டேஷன் செயலர் பி.வி. சிவன் வரவேற்றார். எப்ஏசி செயலர் சசிகுமார்  நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com