கன்னியாகுமரி

குமரியில் சூறைக் காற்றுடன் மழை: நூற்றுக்கணக்கான வாழைகள் சேதம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.
குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில்  கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவட்டாறு, குலசேகரம், அருமனை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. 
இதில், அருமனை அருகேயுள்ள தெற்றிவிளை, நல்லூர்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக் காற்றால் நல்லூர்கோணம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சுரேஷ் ஆகியோருக்குச் சொந்தமான 500-க்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் சாய்ந்தன. இதைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டனர்.
இதேபோல்,  கடையாலுமூடு அருகேயுள்ள ஆம்பாடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி அருண் என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர்ந்து, மழை நீடிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், அருமனை சுற்றுவட்டாரப் பகுதியில் வாழைகள் சாய்ந்துள்ளதால்  பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT