குமரியில் ரூ.32.89 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் அளிப்பு

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.32.89 லட்சம் மதிப்பில் 258  பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.32.89 லட்சம் மதிப்பில் 258  பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தோவாளை ஒன்றியம், இறச்சகுளம் சமுதாய நலக்கூடம், ஈசாந்திமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் ஆகியோர் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கினர். இத்திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பில் 4 வெள்ளாடுகளும், அதற்கான கொட்டகை அமைக்க  ரூ. 2ஆயிரம், காப்பீடு செய்வதற்காக ரூ. 300 மற்றும் போக்குவரத்து செலவுக்காக ரூ. 150 மற்றும் பயிற்சிக்காக ரூ. 300 என  ரூ. 12,750 மதிப்பில் 258 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், கால்நடைப்பராமரிப்புத்துறை இணைஇயக்குநர் எஸ். ஜோசப்சந்திரன், உதவிஇயக்குநர்ஆர்.சுவாமிநாதன்,  ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் எஸ். கிருஷ்ணகுமார்,  சாம்ராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதாராமசந்திரன் உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com