குருந்தன்கோடு சந்திப்பில் மார்க்சிஸ்ட் தர்னா

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (லெனினிஸ்ட்) சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் தர்னா போராட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது. 
தேவஅருள் தலைமை வகித்தார். அருள்டேவிட், முத்துகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் அந்தோணிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் மேரிஸ்டெல்லா, ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவர் சுசீலா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
100 நாள் வேலைத் திட்டத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் கனரக வாகனங்களை வைத்து வேலைசெய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒக்கி புயல் பணிக்கான பணப்பட்டுவாடாவை  தாதமின்றி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும். குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். குளங்கள் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 300 நாள் வேலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
இதில், கார்மல், அர்ஜூனன், பாலையா, ஞானசெல்வம், பிரபாகரன், ஜேசுராஜா, சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com