நாகர்கோவிலில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாகர்கோவிலில்  பல்வேறு அரசியல் கட்சியினரும்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாகர்கோவிலில்  பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும்  ஞாயிற்றுக்கிழமை மலர் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்து ராணுவ வீரர்களின் படங்களுக்கு மாவட்டச்செயலாளரும், ஆவின் தலைவருமான எஸ்.ஏ. அசோகன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட திமுகவின் சார்பில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த துணை ராணுவப்படை வீரர்கள் தூத்துக்குடி சுப்பிரமணியன், அரியலூர் சிவச்சந்திரன் ஆகியோரின் படங்களுக்கு  மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ,  ஆஸ்டின் எம்எல்ஏ உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏற்றியும், தீபம் ஏந்தியும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமரி மாவட்ட பாஜக சார்பில் வடசேரியில் தீப விளக்குகளை ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் முத்துராமன்,  நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ், மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மெழுவர்த்தி ஏற்றி பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


நித்திரவிளை அருகே...
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., தெருவுமுக்கு ஹெட்கேவார் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்பட இந்து இயக்கங்கள் சார்பில் நித்திரவிளை அருகே வீரவணக்க நினைவஞ்சலி பாதயாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது. ஏழுதேசம் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் குமார் தலைமை வகித்தார். ஏழுதேசம் மண்டல பாஜக தலைவர் ராஜகுமார் முன்னிலை வகித்தார். இதில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், கிரீஷ், பினு, பாஜக மகளிரணி நிர்வாகிகள் உஷா, அம்பிளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நித்திரவிளை சந்திப்பிலிருந்து துவங்கிய தீபஜோதி பாதயாத்திரை தெருவுமுக்கு வழி காஞ்சாம்புறம் பகுதியில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com