விவசாயிகள் நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்ளப்படும்: மாவட்ட ஆட்சியர்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்ளப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே. 

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து பெற்றுக் கொள்ளப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே. 
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 6000 செலுத்தப்படும்  பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில், விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வதற்கான இறுதி தேதி அறிவிக்கப்படாத நிலையில், இம் மாவட்டத்தில் திங்கள்கிழமையுடன் பல வருவாய் கிராம அலுவலங்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர் என்பது தொடர்பான புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருவட்டாறு வட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாவட்ட பிரசாந்த் மு. வடநேரேசெய்தியாளர்களிடம் கூறியது: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் ஒரு தொடர்ச்சியான திட்டம். இதற்காக விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பங்கள்  பெற்றுக் கொள்வதற்கான இறுதி தேதி அறிவிக்கப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வார்கள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com