குமரி மாவட்டத்தில் 15 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 15 இடங்களில் வியாழக்கிழமை (பிப். 21) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 15 இடங்களில் வியாழக்கிழமை (பிப். 21) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
குமரி மாவட்ட விவசாயத் தொழிலாளர் நலச்சங்கம், புலிகள் சரணாலய எதிர்ப்பு இயக்கம் மற்றும் அனைத்துக் கட்சி  ஒருங்கிணைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
களக்காடு முண்டன் துறை புலிகள் சரணாயலத்துடன் குமரி மாவட்ட வனப் பகுதிகளை இணைக்கக் கூடாது; தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; 2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி களியல், வேளிமலை, தடிக்காரன்கோணம், அருமநல்லூர், ஞாலம், தெரிசனங்கோப்பு, சுருளகோடு, காட்டுப்புதூர், கடுக்கரை, திடல்,ஈசாந்திமங்கலம், இறச்சக்குளம், தாழக்குடி, ஆரல்வாய்மொழி, திட்டுவிளை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com