கன்னியாகுமரி

நாகர்கோவிலில் எம்ஜிஆர் பிறந்த நாள்

DIN

எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில் வடசேரியிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் மாலை அணிவித்தார். இதில், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஏ. அசோகன், தோவாளை ஒன்றியச் செயலர் கிருஷ்ணகுமார், மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், துணைச் செயலர் லதா ராமச்சந்திரன், நகரச் செயலர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி ரபீக், நகர அவைத் தலைவர் கே.எல்.எஸ். ஜெயகோபால், மருத்துவரணிச் செயலர் சி.என். ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குமரியில்...
கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எம்ஜிஆரின் 102ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி பேரூர் அதிமுக சார்பில் அரசு விருந்தினர் மாளிகை முன் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு பேரூர் செயலர் பி.வின்ஸ்டன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அகஸ்தீசுவரத்தை அடுத்த சுக்குப்பாறைதேரிவிளையில்,  எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட மருத்துவரணிச் செயலர் டாக்டர் சி.என்.ராஜதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தொடங்கிவைத்தார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன்,  ஒன்றியச் செயலர் எஸ்.அழகேசன், பொருளாளர் சக்தி கண்ணன், அதிமுக நிர்வாகிகள் ஒய்.கைலாசம், சிவபாலன், பேராசிரியர் இ.நீலபெருமாள், வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரோக்கியபுரம், லீபுரம், வட்டக்கோட்டை சந்திப்புகளில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு ஊராட்சி செயலர் கே.லீன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் பி.தங்கராஜா, முத்துலிங்கம், பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அழகப்பபுரத்தில் பேரூர் செயலர் ஜான் கிறிஸ்டோபர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலர், மாவட்ட மருத்துவரணிச் செயலர், அரசு வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
மகராஜபுரம் சந்திப்பில் ஊராட்சி செயலர் கே.இசக்கிமுத்து தலைமையிலும், பஞ்சலிங்கபுரத்தில் ஊராட்சி செயலர் ஆ.கண்ணன் தலைமையிலும் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT