வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா: நாகர்கோவில் மாணவி தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியம்


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியம் ஆகியவற்றில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து, அவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்துகிறது.
நிகழாண்டு, முதல் கட்டமாக அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய 50 மாணவர், மாணவிகள் பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளுக்கு 14 நாள்கள் கல்விச் சுற்றுலா செல்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இந்த மாணவர்களை தேர்வு செய்தனர். வெளிநாடு சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட செலவு முழுவதையும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கிறது. இம்மாதம் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) சென்னையில் இருந்து புறப்படும் முதல் குழுவினர் பிப். 3 ஆம் தேதி திரும்புகின்றனர். 
இந்த கல்விச் சுற்றுலாவுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவி உமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் எஸ். எம். ஆர். வி. பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் இவரது தந்தை காலமாகிவிட்டார்.
தாயாரின் உழைப்பில் கல்வி பயின்று வரும் இம்மாணவி 6 ஆம் வகுப்பில் இருந்தே அறிவியல் துறையில் ஆர்வமுடன் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இதற்காக அரசின் சார்பில் பல விருதுகள், தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார். 
10 ஆம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். மாணவிக்கு அவரது தாயார், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com