கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்

DIN

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைதொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, குமரி மாவட்டத்தில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தல்  தொடர்பான அறிவிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த  10  ஆம் தேதி  வெளியிடப்பட்டு, அன்று முதல் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றவோ அல்லது மறைக்கவோ வேண்டும் என உத்தரவிடப்பட்டது.     
தற்போது, பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பொதுமக்கள், பயணிகளுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்கள் நிறுவப்படுவதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதியில்லை.    மேலும், இந்த உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்தி, அதற்கான நிலவர அறிக்கையை இம்மாதம் 25 ஆம் தேதிக்குள்  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, நாகர்கோவில் மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையரும், 3 நகராட்சிகளின் ஆணையர்களும், 55 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களும், 95 கிராம ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்களது எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட உத்தரவின்படி மறைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், கொடிக்கம்ப பீடங்கள் உள்பட அனுமதியின்றி பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிக்கம்ப பீடங்களை உடனடியாக அகற்ற  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
மேலும், அவை அகற்றப்பட்டதற்கான அறிக்கையை உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 23 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT