கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஹெச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டுள்ளார். 


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஹெச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டுள்ளார். 
பெயர்: ஹெச். வசந்தகுமார்
சொந்த ஊர்: கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
பிறந்த தேதி: 14.4.1950 
தந்தை: ஹரிகிருஷ்ண பெருமாள் நாடார்
கல்வித் தகுதி: எம்.ஏ. பட்டப்படிப்பு
தொழில்: வணிகம், வசந்த் அன்கோ மற்றும் வசந்த் தொலைக்காட்சியின் உரிமையாளர்
கட்சிப் பதவி: காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர், தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என கட்சியில் பல்வேறு பதவி வகித்து வரும் இவர், 2016 இல் சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடும்பம்: மனைவி தமிழ்ச்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய்குமார், வினோத்குமார். 
2014 இல் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகள் பெற்றார். இத்தேர்தலிலும் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து களம் காண்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com