திருநெல்வேலி

குரூப்-2 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 22,234 பேர் பங்கேற்பு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 98 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 22 ஆயிரத்து 234 பேர் எழுதினர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 1199 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட வட்டங்களில் 98 கல்வி நிலையங்களில் 109 அறைகளில் இத்தேர்வு நடைபெற்றது.
29 ஆயிரத்து 683 பேருக்கு தேர்வுக் கூட அனுமதி சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 22 ஆயிரத்து 234 பேர் பங்கேற்றனர். 7 ஆயிரத்து 449 பேர் பங்கேற்கவில்லை.
கடும் சோதனைக்குப் பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பாளையங்கோட்டையில் கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, வி.எம். சத்திரத்தில் ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, பார்வையற்றோருக்கான சிறப்பு மையங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் திருநெல்வேலி நகரம் சாப்டர் மேல்நிலைப் பள்ளி, லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தை பார்வையிட்டார்.
துணை ஆட்சியர் நிலையில் 12 பறக்கும்படை மற்றும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் நிலையில் 26 சுற்றுக் குழுக்கள், 109 ஆய்வுப் பணி அலுவலர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களில் தடையின்றி மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT